Thursday, October 11, 2018

புறாக்குஞ்சு




அழகியதொரு புறாக்கூடு 
என் அப்பா தேடித்தேடி எனக்காய் கட்டிய கூடு
அம்மாவும் நானும் என் உடன்பிறப்புக்களும் வாழ
சிக்கனமாய் சேமித்த உழைப்பில் நெய்யப்பட்ட கூடு
பலத்த காற்று இல்லை இல்லை சிறு சூறாவளி வீச 
சிறகு விரித்து காத்திருந்தார் என் அப்பா
கிடைத்த இரையை எமக்கு பகிரவே உம் உழைப்பு போதுமாயிற்று அப்பா
இருந்தும் சேமித்து உமக்கும் தந்தாள் என் அம்மா
என் உடன் பிறப்புக்கள் முட்டையை விட்டு வெளியே
வந்து விட்டார்கள் நான் வெளிவர நாளாகும் அப்பா
கருவிலிருந்து உம்மை நேசிக்கின்றேன் அப்பா
இந்த முறை சூறாவளி இல்லை கொடிய விஷப்பாம்பு
உம்மைத் தீண்ட கவனமாக இரு மகளே எனக் கூறி உயிர் மாய்த்தீர் அப்பா
அம்மா இம்முறை எம்மீது உம் கவனமும் அக்கறையும் கூடிடவே அப்பாவின் இடத்தில் தந்தையானவள் ஆகினாள்
மற்றைய குஞ்சுகள் வளர்ந்துவிட்டன இப்பொழுது இரை தேடச் சென்றுவிட்டன
அவர்களுக்கும் நம் போன்ற கூடு அமைய நினைத்தீர்கள் ஒவ்வொரு திசையில் அமைத்துக் கொண்டார்கள்
கடைசிக் குஞ்சு நான் முட்டையை விட்டு வந்துவிட்டேன்
பெரிய உலகம்தான் சுற்றிவரக் கழுகுகள் தான் இடை இடையே என்னைப் போன்ற புறாக்குஞ்சுகள் பறப்பதற்கு தடுமாறிடவே துணையாக நிற்கின்றேன் கருவினிலே நான் கொண்ட அனுபவத்தில்
அம்மா நீ என்னையும் புதிய கூட்டிற்கு செல்லத் தூண்டுகின்றாய்
உன்னைவிட புதிய உலகம் கண்டுவிட்டேன் அதில் பிடிப்பில்லை
அப்பாவையும் உன்னையும் போல் கூட்டில் வாழத் தெரியாது
இங்கு நம் போல் புறாக்களுக்கு பதிலாக கழுகுகளே இருக்கின்றன.
நம் கூட்டில் உன் சிறகுகளுக்கிடையில் கதகதப்பில் வாழ ஆசைப்படுகின்றேன் இந்த வளர்ந்த புறாக்குஞ்சு

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...