Friday, June 12, 2020

நார்த்திகவாதி யார்?

               




















ஆர்த்திகன் என தன்னைத் தானே தம்பட்டம் 

அடித்துக்கொள்பவனை எதேற்ச்சையாய்

கண்டேன் அவனோ என்னை 

நார்த்திகன் என ஏளனமாய்ப் பார்த்தான்

எள்ளளவேனும் இடைவெளி நிரப்ப கிள்ளும் 

வார்த்தைகளால் வினவ நினைத்தவன் 

போலிப் புன்முறுவலுடன் சகா என்றான்


உங்கள் வயலில் விளைச்சல் எப்படி 

எல்லாம் இறைவன் சித்தம் என்றான் 

பாடுபட்டு வியர்வை சிந்தியவன் விவசாயி 

அவன் நலனை வேண்டுங்கள் என்றேன் 

மழையும் வெயிலும் இறைவனின் படைப்பு 

ஏன் வார்த்தைகளில் நையப்புடைப்பு என்றான்

பனை மூழ்கும் வெள்ளத்தையும் விறகெரியும்

கொழுந்தணல் வெயிலையும் அதே இறைவன் தானே

படைத்திருக்கவேண்டும் என்றேன் நான்


வாணிவிழாவில் சிறப்புறையாற்ற 

வரவேற்கிறேன் என்றான் 

எதற்காக வாணிவிழா அதன் முக்கியத்துவம் 

தான் என்ன என்றேன்

கல்வியின் அதிபதி சரஸ்வதிதேவி உள்ளம் மகிழ்ந்தால் 

மாணவர் கல்வி சிறக்கும் என்றான்

காதுச்சவ்வு கிழிய காணொளிப் பாடலை காலை மாலை 

இடைவெளியற்று உரக்க ஒலிபெருக்கினால் 

சாந்த சொரூபிணி சரஸ்வதியே ஓடிவிடுவாள் என்றேன்


மாரிமுத்துவின் மகள் அம்மைபோட்டு படுத்திருக்காள் 

அந்தப்பக்கம் போய்விடாதே என்றான் 

அம்மனை தரிசிக்கத்தானே ஆலயத்தோறும் ஆராதனை செய்வீர்கள் 

அம்மனே நேரில் வந்தால் ஏன் ஓடுகிறீர்கள் என்றேன்

அம்மனின் குறைபாடு அம்மன் கோபிக்கும்

தொற்றிவிடும் சரியான உபத்திரம் என்றான்

நீதான் பல தொண்டுகள் செய்கிறாயே

எப்படி அம்மனுக்கு குறைவரும் 

அம்மை எப்படி உனக்கு வரும் என்றேன்


கோவில் சந்நிதானம் நேரே கால் நீட்டாதே என்றான் 

காலில் இரத்த ஓட்டம் சிறிது சரிவரும்வரை பொறு என்றேன் 

கூடாது கூடாது

சுவாமி கோபிக்கும் என்றான் 

சந்நிதானத்திலும் கற்பகிரகத்திலும் மட்டும் தான் 

கடவுள் இருக்கிறாரா

சர்வவியாபகம் என்று சமயப்புத்தகத்தில் படித்தது 

பொய்யா என்று கேட்டேன்


பால்குடம் பவனிவர பாலமுருகன் கோயில் திருப்பணியில் 

கலந்துகொள்ள வருவாயா என்றான்

பசியில் வாடும் தாயற்ற பிஞ்சுக்கும் 

பட்டினியில் வறுமை வாட்ட கஞ்சி குடிக்கும் ஏழைக்கும் 

இந்தப்பால் கிடைத்திருந்தால் ஏன் கள்ளிப்பாலை

வலுக்கட்டாயமாய் பருக்கப்போகிறான் என்றேன்

எல்லாம் தங்கத்தால் வெய்யப்பட்ட கூரையில் 

குடிகொண்ட சந்நிதியான் பார்த்துக்கொள்வான் என்றான் 

அந்த தங்கக்கூரையை விற்றாலே வேறு நாட்டில் 

கையேந்தும் நிலை 

நம் நாட்டுக்கே தேவையில்லையே என்றேன்


போடா போ நீ இன்னும் மாறவில்லை என்றான் சலிப்போடு 

உங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் மாற்றம் காணும் வரை 

பரம்பரை அலகில் இதுவும் ஒட்டிக்கொள்ளும் கசடாக 

அதை என்னைப்போல் ஒருவன் முளைத்துக்கொண்டே இருப்பான் 

தூய்மையாக்க என்றேன் 




No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...