Thursday, October 11, 2018

காதல் கொண்டேன் பெண்ணே

நீள் கருங்கூந்தலிலும் இல்லை
வளைந்தெடுத்த புருவங்களிலும் இல்லை
செவ்விதழ் ரேகையிலும் இல்லை
பஞ்சணை மேனியிலும் இல்லை
செஞ்சந்தன நிறத்திலும் இல்லை
தாமரைப் பாதங்களிலும் இல்லை
வெண்மெழுகு நகத்திலும் இல்லை
காந்தவிழி அழகிலும் இல்லை
மென்மொழி செப்புதலிலும் இல்லை
கொச்சை பேசும் உலகம்தனை ஓரம்கட்டி
நித்தம் நெஞ்சில் துணிவுடன் ஒற்றை வழிப்பாதையில்
தடம் பதித்து செல்கையில் உன் திமிர் கண்டு
நான் காதல் கொண்டேன் பெண்ணே




முறுக்கு மீசைக்காரா



முறுக்கு மீசைக்காரா
மூங்கிலில் காற்றாய் மனம் வீசுதடா
அந்திசாயும் நேரம்
அடிமனதில் காதல் தீண்டுதடா
பச்சரிசிச்சோறும் காரமான மீன் குழம்பும்
நித்தம் நீ கண்ணாற என் மடி இருக்குதடா
பாகற்காய் நெய்ச்சோறு பசிக்கையில்
பத்தியமாய் ஒரு பார்வை பார்த்திடடா
காதல் தாகம் தான் எடுக்கையில்
செல்லமாய் ஒரு மொழி பேசிடடா
கோவக்காய் கோவமாய் நீ காதல் மொழிகையில்
பாசாங்கு செய்த பாவக்காரி நானடா
உள்ளூறும் தேனூறும் உன்மீது காதலூறும்
சொல்லவந்த நேரம் உன் மனம் தூரமானது ஏனடா


💔 கருகிய மலரின் காதல் 💔


மண்மீது காதல் கொண்டு 
அதில் விதை ஒன்று விதைத்தாய்
தினமும் நீர் ஊற்றி
தவறாமல் ஓரிரு முறை பசளையிட்டு
இதமான கதகதப்பும் விதை சுவாசிக்க காற்றும்
உன் பார்வையால் வெளிச்சமும் தந்து

நாளுக்கு நாள் காத்து நின்றாய்

உன் ஆசைபோல் செடியும் வளர்ந்தது

அதில் மலரும் மலர்ந்தது
இத்தனை பாடுபட்டு உயிர்பித்த உன்னைத்
தேடித் தேடி இம்மலர் வாடத்தொடங்கியது
மலருக்கு தாகம் எடுக்க அதை தண்ணீர் ஊற்றி தணிக்க நீ இல்லை
நோயினால் வாட அதை அரவணைக்க இன்று நீ இல்லை
இதழோ கலையிழந்து போக
புத்துணர்வோ பூச்சியமாக
வண்டு தேடிய நறுமணம் உயிர்பற்றுப் போக
வண்ணமோ வலு இழந்து போக
நாட்களும் கடந்து போக வாழ முடியாத மலரோ செடியின் வேருடன் கருகிப் போக ஐயோ எனப் பரிதாபமடைய நிறைவாய் நீ அங்கும் இல்லை
எங்குதான் சென்றுவிட்டாய்
மலரோ மடிந்தது மண்ணோ இனி தரிசு நிலம் ஆயிற்று
இதற்குத்தான் இத்தனை அவசரம் கொண்டாயா?

💔 Renu 💔











நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...